கோவை,
சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கேரளம் மாநிலம் சொரனூர் அருகே ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக கோவை-சொரனூர் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சொரனூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் சொரனூர்-கோவை ரெயில் மற்றும் மாலை 4.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-சொரனூர் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.