தமிழக செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணியை பார்வையிட்ட கலெக்டர்

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.

திருச்சி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வயலூர்சாலை பகுதி மற்றும் தென்னூர் உழவர்சந்தை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று நேரில் பார்வையிட்டுஆய்வு செய்து, பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகர்நல அலுவலர் மணிவண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று 120.68 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

SCROLL FOR NEXT