கோடம்பாக்கம்,
சென்னை கோடம்பாக்கத்தில் செல்போனில் நீண்ட நேரமாக பப்ஜி கேம் விளையாடிய மாணவரை தாய் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த மாணவர் திடீரென வீட்டின் படுக்கையறைக்கு சென்று அங்குள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.