தமிழக செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் அருகே உள்ள மேல்வேலம் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா (வயது 19). இவர் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இவருக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மாணவி லாவண்யா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT