தூத்துக்குடி சக்திவிநாயகர்புரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மகள் அகிலா (வயது 19). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டா. இதனால் அகிலா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அகிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.