தமிழக செய்திகள்

கோவில்பட்டியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கலைஞர் நகரில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மகள் திவ்யா (வயது 18). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் கல்லூரியில் என்.சி.சி. மாணவியாக உள்ளார். அங்கு இவர் ஒழுங்கீனமாக நடந்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக இனிமேல், தான் போலீஸ் வேலைக்கு போக முடியாது என்று கருதி திவ்யா மன வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது.

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை:

இந்த நிலையைில் அவர் தனது வீட்டில் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.