கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

செல்போன் பார்த்ததை கண்டித்த தாய்... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி மனவேதனை அடைந்துள்ளார்.

சேலம்,

செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி மாணவி

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரிய சோரகை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மனைவி ராஜாத்தி. இவர்களுடைய மகள் நதியா (19 வயது). இவர் நங்கவள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கண்டித்த தாய்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியின் தாயார் வேலைக்கு செல்லும்போது வீட்டில் இருந்து செல்போன் பார்க்க வேண்டாம் என அறிவுரை கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து மாலை அவர் வீடு திரும்பியபோது மாணவி செல்போன் பார்த்து கொண்டு இருந்துள்ளார். அதற்கு அவர் 'ஆடு, மாடு எல்லாம் தீவனம் இல்லாமல் இருக்கு, நீ செல்போன் பார்த்து கொண்டு இருக்கிறாய்' என நதியாவை திட்டியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மாணவி நதியா மனவேதனை அடைந்துள்ளார். இதையடுத்து வழக்கம் போல தூங்க சென்ற நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் தாய் ராஜாத்தி ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது மாணவி துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து, கதவை உடைத்து நதியாவை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT