தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கல்லூரி மாணவர் பலி-2 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் கல்லூரி மாணவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

உப்பிலியபுரத்தை அடுத்த டி.மங்கப்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை பார்ப்பதற்காக துறையூரை அடுத்த திண்ணனூர் கிராமத்தை சேர்ந்த அமர்நாத் (வயது 21) தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று இருந்தார். ஜல்லிக்கட்டு முடிந்ததும், அவர் மீண்டும் ஊருக்கு மாட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கொப்பம்பட்டி பவர்ஹவுஸ் அருகே வந்தபோது, எதிரே, சோபனபுரம் ஊராட்சி ஒடுவம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அமர்நாத் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் செல்வராஜ், அவருடன் வந்த நல்லதம்பி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த அமர்நாத் புத்தனாம்பட்டியில் உள்ள கல்லூரியில் வணிகவியல் துறை 3-ம் ஆண்டு படித்து வந்தார். 

SCROLL FOR NEXT