தமிழக செய்திகள்

இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை மீட்டுத் தருக - முதல்-அமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களை கைது செய்தனர்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 469 விசைப்படகுகளில், மீனவர்கள் நேற்று முன்தினம் (22.07.2026) கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்களில் 9 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது உடைமைகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.

மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மாலிக்தினார், கயாஸ், செந்தில், கிரித்திசன், பிரவீன், அருள்லயோலா, சவுரி வினோத்வின், தேவசகாயம், இன்பென்ட் பிரசாத் ஆகிய 9 மீனவர்களையும் விடுவித்து, அவர்களது உடைமைகளையும் மீட்டு தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், தமிழ்நாடு முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.