மு.வீரபாண்டியன் 
தமிழக செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமை ஏற்று கண்டன உரையாற்றினார்.

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

பேராபத்து உள்ளது

திருப்பரங்குன்றம் சர்வே கல் தூணில் நாளை (28.11.2026) தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது, பாரபட்சமானது, அறிவியலுக்கு புறம்பானது ,சட்ட நடைமுறைகளுக்கும் ,மதச்சார்பின்மைக்கும் எதிரானது. இதனால், தமிழ்நாட்டின் மதநல்லிணக்கம்,மக்கள் ஒற்றுமை சீர்குலையும் பேராபத்து உள்ளது.

கண்டன ஆர்ப்பாட்டம்

சுப்ரீம் கோர்ட்டின் ,அரசியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரான இந்த உத்தரவை கண்டித்தும்,அதை திரும்ப பெற வலியுறுத்தியும் ,மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க வலியுறுத்தியும்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று , மாலை கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற்றது.

மு.வீரபாண்டியன்

சென்னை தேனாம்பேட்டை தாமஸ்ரோடு சந்திப்பு அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமை ஏற்று கண்டன உரை யாற்றினார்.

கண்டன முழக்கங்கள்

கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணை செயலாளர் முன்ளாள் சட்டமன்ற உறுப்பினர் நா.பெரியசாமி ,தேசிய குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்,ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஏ.ஆர்.சாந்தி,கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா,வடசென்னை மாவட்ட செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி,மத்திய சென்னை மாவட்ட செயலாளர் மு.வரதன் ,மாநிலக் குழு உறுப்பினர்கள் லி.உதயக்குமார் ,இப்ராஹிம் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT