தமிழக செய்திகள்

கமல்ஹாசனுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்தார். வெளிநாடு சென்று திரும்பிய கமல்ஹாசனை முத்தரசன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உடனிருந்தார்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.