தமிழக செய்திகள்

வில்லிவாக்கத்தில் கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழா... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்பு

அம்மா இல்லை என்கிற ஒரு வருத்தம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.

சென்னை,

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகர் சமுதாய நலக் கூட அரங்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமூக வளைகாப்பு விழா நடைபெற்றது.

வளைகாப்பு விழா

மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா துவக்கி வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-

ஒரு குழந்தை என்ன எதிர்பார்க்கும் என்றால் எங்க அம்மா பக்கத்தில் இருந்தால் உலகத்தையே ஜெயித்து விடலாம் அப்படி என்று ஒரு குழந்தை நினைக்கும், பார்த்தீர்களா அதுதான் அம்மாவுடைய வில்பவர்.

என்னுடைய அம்மா என்னை விட்டு போகவில்லை என்றால் என்னுடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும். அதை நான் இன்று வரைக்கும் யோசித்துக் கொண்டே இருந்திருக்கிறேன். இந்த சிந்தனையை விடவே கூடாது. இந்த சிந்தனை எனக்கு ஐந்து வயதில் வந்தது. இன்று வரைக்கும் வந்து கொண்டே இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் பக்கம் போனதுனால அப்படியே நான் கொஞ்சம் படிக்கப் போனேன். அது எனக்கு பாசிட்டிவா மாறிவிட்டது. நான் ஸ்போர்ட்ஸ் பக்கம் போகவில்லை என்றால் என் வாழ்க்கை முறையே நெகட்டிவா போயிருக்கும்.

தன்னுடைய தந்தையும் தாயும் சரியாக இல்லாத போது தான் தவறான ஒரு பாதைக்கு மகன் போய் இருப்பார். திரும்பவும் நான் பதிவு பண்ணுகிறேன், ஒரு குழந்தைக்கு அம்மாவும் அப்பாவும் முக்கியம்.

அம்மா என்கிற விஷயம் ஜாதிக்கும், மதத்திற்கும், பணம், புகழ் எல்லாத்துக்கும் மேல அம்மா இல்லை என்கிற ஒரு வருத்தம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.

குழந்தைகள்

நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சியாக இருக்கும் போது எல்லாம் உங்களைத் தேடி வரும். அது பணமா இருக்கலாம், புகழா இருக்கலாம். என்ன வேணாலும் இருக்கலாம். உங்க குழந்தைகளை ஸ்போர்ட்ஸ்ல கொண்டு வாங்க முதல்ல.

குழந்தைகளை புத்தகம் படிக்க வையுங்கள். பெரிய பெரிய தலைவர்களை பற்றி சொல்லுங்கள். மேடம் ஜெயலலிதா எவ்வளவு கஷ்டப்பட்டு முதல்-அமைச்சர் ஆகி இருக்கிறார்கள். கஷ்டம்னா என்ன, வலி என்றால் என்ன, வாழ்க்கைன்னா என்ன? இதையெல்லாம் தாண்டி மேடம் ஜெயலலிதா ஜெயிச்சு இருக்காங்க. நம்ம விஜய் அண்ணா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்து இருக்கிறார். எவ்வளவு பேரு டெய்லி அவரை திட்டி கொண்டு இருக்கிறார்கள். பதில் கொடுக்காமல் அவர் எப்படி ஜெயிக்கிறார்.

உங்க குழந்தைகளை நல்லா ஸ்போர்ட்ஸ்ல, நல்ல சயின்டிஸ்ட்டா சாதிக்க கூடிய குழந்தைகளாக உருவாக்கணும். உங்க குழந்தைகளுக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை நீங்க போக்கஸ் பண்ணினால் அந்த குழந்தை உலகத்தில் நம்பர் ஒன் குழந்தையாக கொண்டு வர முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT