தமிழக செய்திகள்

மனைவி அளித்த புகார்: பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்ட்

மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பரமக்குடி,

மனைவி அளித்த புகாரில் பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மனைவி புகார்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக். இவருடைய மனைவி ஷோபனா. இவர் கடந்த 4-ந்தேதி வேலூர் போலீசில் தன்னை கணவர் தாக்கியதாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையில் வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சஸ்பெண்ட்

இந்நிலையில் நேற்று வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார், பரமக்குடி வந்து துணை சூப்பிரண்டு ஜாபர் சித்திக்கிடம் விசாரணை நடத்தி அவரது அலுவலகத்தையும் சோதனை செய்தனர். இதற்கிடையே ஜாபர் சித்திக்கை தமிழக உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.