சென்னை,
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை நுழைவு வாயிலில் கான்கிரீட் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தாய் மற்றும் 7 வயது மகள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தாய்க்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. அதே சமயம், சிறுமி சற்று ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.