தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யுடன் இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை சென்னை தலைமைச்செயலகத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தலைவர் ஆர்.முகுந்தன் நேரில் சந்தித்து பேசினார்.

சென்னை

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யுடன் இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை சென்னை தலைமைச்செயலகத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தலைவர் ஆர்.முகுந்தன் நேரில் சந்தித்து பூக்கூடை கொடுத்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பின்போது, தென் மண்டல தலைவர் பு.ரவிச்சந்திரன், தென் மண்டல இயக்குநர் இந்திரனில் கோஷ், தமிழ்நாடு தலைவர் மற்றும் இயக்குநர் பா. ஜெய்கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT