சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்!
ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் அணி பிரிவு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் பயணத்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்காக அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா ஆகியோருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் பதக்க வேட்டை தொடரட்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.