சென்னை,
சைப்ரஸ் நாட்டில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். கேண்டிடேட்ஸ் போட்டியில் வாகை சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை 24 வயதான வைஷாலி படைத்தார். அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் (Paphos) நகரில் நடைபெற்ற பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் (FIDE Candidates 2026 tournament) பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் பயிற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையால் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்து உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராகியிருக்கும் வைஷாலி அதிலும் வெற்றிவாகை சூடி ஒட்டுமொத்த இந்திய திருநாட்டிற்கும் பெருமையைத் தேடித்தந்திட வேண்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.