சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் தவெக 107 இடங்களில் முன்னிலை பெற்று, சரித்திர சாதனை படைத்துள்ளது. விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், விஜய்க்கும், அவரது கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்