சென்னை,
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இன்னும் உறுதியாகவில்லை.
இந்த நிலையில், திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு் குறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
எங்களுடன் கூட்டணி வைத்தால்தான் சட்டமன்றம் செல்ல முடியும் என்பது காங்கிரசுக்கு தெரியும். இங்கு கூட்டணி வைத்தால் தான் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் அந்தஸ்து கிடைக்கும். எங்கள் தலைவர் சரியான பாதையில் கூட்டணியை கொண்டு செல்வார். கூட்டணி குறித்து தவெக - காங்கிரஸ் இடையே திரைமறைவில் ரகசிய பேச்சுவார்த்தை என்பது வதந்தி.
அதிமுக - பாஜக கூட்டணியில் யார் மேஜர், யார் மைனர் என்பதே இன்னும் முடிவாகவில்லை. அதிமுக - பாஜக கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எத்தனை தொகுதிகள் என்பதை இன்னும் சொல்லவில்லை. அதிமுக கூட்டணியில் இடியாப்ப சிக்கல் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.