தர்மபுரி,
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பா.ம.க. கவுரவத்தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் மகன் ஜி.கே.எம்.தமிழ்குமரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத் தினார்கள்.
இந்தநிலையில் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் வேட்பாளர் அறிவிப்புக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவரும், தர்மபுரி மாவட்ட முன்னாள் பொறுப்பாளருமான பி.தீர்த்தராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
1991-ம் ஆண்டுக்கு பிறகு தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. அரசியலில் ஆர்வமோ, அனுபவமோ இல்லாத ஒருவரை கட்சியில் சேர்ந்த 4-வது நாளிலேயே பென்னாகரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது மாவட்டத்தில் கட்சிக்காக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளிக்கின்றது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.