ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கோபிநாத் பழனியப்பன் அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாநகர காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் அதிருப்தி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் நேற்று வேட்புமனுவை வாபஸ் பெற்ற ஜாபர் சாதிக் த.வெ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஜாபர் சாதிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட 5 பேரிடம் கட்சியின் தலைமை விருப்பமனு பெற்றது. இதைத்தொடர்ந்து டெல்லி காங்கிரஸ் அலுவலகத்துக்கு நேரில் சென்றபோது உரிய மரி யாதை கிடைக்கவில்லை. மேலும் விருப்பமனு வழங்கியவர்களி டம் முறையாக நேர்காணல் நடத்தவில்லை.
இதனால் அதிருப்தி வேட்பாளராக மனுதாக்கல் செய்தால் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்போதும் பேசவில்லை. எனவே வேட்பு மனுவை வாபஸ் பெற்றதோடு கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.