தமிழக செய்திகள்

தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக்கோரி சென்னையில் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம்

28-ந்தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதாவின் முகமாகவே செயல்பட்டு வருகிறார். எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதும், முறையற்ற வகையில் புதிய நபர்களை சேர்ப்பதும் நடைபெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டம்

தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் ஜனநாயகத்தின் அடிப்படை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த முறைகேடுகளை கண்டித்தும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரியும் காங்கிரஸ் சார்பில் 2 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதன் ஒரு பகுதியாக, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதை தொடர்ந்து, வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, எம்.பி.க்கள் விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT