தமிழக செய்திகள்

தமிழக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்தநிலையில் தமிழக கவர்னரை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் (ஊடக பொறுப்பாளர்) ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள த.வெ.க. ஆட்சி அமைக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜனதா அரசைக் கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் கவர்னரை கண்டித்தும், சென்னை அண்ணாசாலை, தாராப்பூர் டவர் அருகில் 8-ந்தேதி (இன்று) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.