கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

குதிரை பேரத்தை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது - செல்வப்பெருந்தகை

தமிழக உரிமையை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 62-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

முதல்-அமைச்சராக யார் பதவியேற்றாலும் பிரதமரை சந்திப்பது வழக்கமான நடைமுறைதான். ஏற்கெனவே கேரள முதல்-மந்திரி சந்தித்திருக்கிறார். அந்த வகையில் தமிழக முதல்வரும் சந்திக்கிறார்.

தமிழக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அதை முதல்வரும் வலியுறுத்துவார் என நம்புகிறோம். மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டால் நாங்கள் அதை எதிர்ப்போம். தமிழக உரிமையை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

குதிரை பேரத்தை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மராட்டியத்தில் குதிரை பேரத்தை காங்கிரஸ் கண்டித்தது. இதுதான் அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும். 'ஐந்து மாநிலத் தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் இருக்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் ஏற்றுவார்கள்’ என்றோம். அதைத்தான் மத்திய பாஜக அரசு இப்போது செய்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.