தூத்துக்குடி,
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு ‘வந்தே பாரத்’ ரெயிலை இயக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-
“அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில 77 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. துாத்துக்குடி விமான நிலையம், அதிக நீளமுள்ள ஓடுதளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளமும் வர உள்ளது.
திருச்செந்தூருக்கு தினந்தோறும் சுமார் 50,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த பக்தர்களுடைய தேவைகளை பூர்த்தி செல்வதற்கான ஒரு அடிப்படை மதிப்பாய்வை செய்ய வேண்டும் என நான் வலியுறுத்தியுள்ளேன். திருச்செந்தூர்-சென்னை இடையே ‘வந்தே பாரத்’ ரெயிலை இயக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.