தமிழக செய்திகள்

சுகாதார வளாகம் கட்டும் பணி

சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கியது.

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை நகராட்சிகுட்பட்ட 32-வது வார்டில் சுகாதார வளாகம் முற்றிலும் சேதமடைந்து சுகாதாரமற்ற நிலையில் கிடந்தது. இதனை அகற்றி விட்டு நவீன முறையில் புதிய சுகாதார வளாகம் கட்டித் தரக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் அ.தி.மு.க. கவுன்சிலர் ராமதிலகவதி கவுன்சிலர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து கவுன்சிலரின் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் ரூ.28 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் கட்ட அனுமதிக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நகர்மன்ற உறுப்பினர் ராமதிலகவதி முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT