தமிழக செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் கட்டுமான பணி நிறுத்தம்

அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தென்காசி,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி என அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

மெயின் அருவியில் தற்போது புதிய பாதுகாப்பு வளைவு, உடை மாற்றும் அறைகள், கார் நிறுத்தும் பகுதிகளில் தடுப்புச்சுவர் என பல்வேறு கட்டு மான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பணிகளில் தொய்வு ஏற்பட்டுள் ளதால் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவில் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய தால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்திருந்தனர்.

நேற்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப்பொ ழிவு சற்று குறைந்ததை அடுத்து ஐந்தருவிக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கியது. இதனால் அங்கு மீண்டும் குளிக்க அனுமதி வழங் கப்பட்டது.

சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருவதால் நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் பலரும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.