தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள சிவலூர், மணங்கொண்ட அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் பிரபு (வயது 33). கட்டிட கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையான பிரபு, அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது மனைவி சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
வழக்கம்போல் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் மனவேதனையில் இருந்த பிரபு, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு அருகில் இருந்த கருவேல மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.