தமிழக செய்திகள்

லாரி மீது மொபட் மோதல்; கட்டிட தொழிலாளி சாவு

நாமக்கல் அருகே லாரி மீது மொபட் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல் அருகே உள்ள புலவர்பாளையத்தை சேர்ந்தவர் அழகேசன் (வயது45). கட்டிட தொழிலாளி. இவர் கீரம்பூரில் இருந்து கட்டிட பணியை முடித்துக் கெண்டு, தனது மெபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். வள்ளிபுரம்பாரப்பட்டி சாலையில் சென்றபேது, முன்னால் சென்று கெண்டிருந்த டாரஸ் லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்பேது பின்னால் சென்ற அழகேசன் மெபட், லாரி மீது மேதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அழகேசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.