தமிழக செய்திகள்

தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு- கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

சென்னையை அடுத்த கோவளத்தில் அமைந்துள்ள 'பிஷர் மேன்ஸ் கோவ் ரிசார்ட்'டில் முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமையில் ஆதரவு கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நடி கர் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தேர்தலுக்கு முன் த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும் யாரும் கூட்டணி அமைக்காத நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான உடன் முதல் கட்சியாக காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கூட்ட ணியை உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் த.வெ.க. கூட் டணியில் இணைந்தன. கடந்த ஒரு சில தினங் களுக்கு முன் ம.தி.மு.க.வும் த.வெ.க. கூட்டணி யில் இணைவதாக அறிவித்துள்ளது. அதே நேரம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர், தங்களது பதவியை ராஜினாமா செய்து கொண்டு த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள்.

கூட்டணி ஆலோசனை

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், தி.மு.க. தலை வர் மு.க.ஸ்டாலின் பல நிகழ்ச்சிகளில் பேசும் போது. தமிழகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று பேசி வருகிறார். இந்த நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளித் துள்ள கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து தங்கள் கூட்டணிக்கு நல்ல ஒரு பெயரை சூட்டி, தங்கள் கூட்டணியை வலுப்படுத்தி, 5 ஆண்டுகள் ஆட்சியை இடையூறு இல்லாமல் கொண்டு செல்ல முதல்-அமைச்சர் முடிவு செய்துள்ளார். இதற்காக சென்னையை அடுத்த கோவளத்தில் அமைந்துள்ள 'பிஷர் மேன்ஸ் கோவ் ரிசார்ட்'டில் முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமையில் ஆதரவு கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

விரைவில் முடிவு

இந்தக் கூட்டத்தில் முதல் அமைச்சர் விஜய், விசிக தலைவர் தொல் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காதர் மொய்தீன் , வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா , நிர்மல் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொடனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைந்துவிட்டது. கூட்டணி பெயர் பற்றி அடுத்த கட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இது இயற்கையாக அமைந்த கூட்டணி” என்றார். கூட்டத்தில் பங்கேற்ற பிற கட்சி நிர்வாகிகள் கூறும் போது, இந்த ஆட்சி ஐந்து ஆண்டு காலமும் நீடிக்கும் என்றனர்.