சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு வரை 10 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது இந்த வருடம் 11-ம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடியில் உள்ள புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே ஒருவரது நிலத்தில் நடைபெற்று வருகிறது.
இப்பணியில் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் தலைமையில் தொல்லியல் துறையினர், சுமார் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 1.5 ஏக்கர் நிலத்தில் 8 குழிகள் தோண்டி அகழாய்வு செய்வது என திட்டமிடப்பட்டு அளவீடுகள் செய்யப்பட்டுள்ளது. அதில் பல குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகின்றன.
அப்போது ஒரு குழியில் அகழாய்வு நடைபெற்றபோது அந்த செங்கல் கட்டுமான சுவரின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த தொடர்ச்சி சுவர் மேற்கே வந்து வலது புறமாக திரும்பி 'ட' வடிவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் மேலும் பல பொருட்கள் கிடைக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.