தொடர் விடுமுறை 
தமிழக செய்திகள்

தொடர் விடுமுறை; சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் மக்கள் -கடும் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் கூட்டம் நிரம்பி வழிந்தன.

சென்னை,

செப்- 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுடன் 3 நாட்கள் விடுமுறை வருகிறது.

இந்த தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்கப் பலரும் இன்று சென்னையில் இருந்து கிளம்பியுள்ளனர். பிற்பகலில் இருந்தே பலரும் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பினர். மாலை நேரம் ஆக ஆக சொந்த ஊருக்கு செல்லும் கூட்டம் அதிகரித்தது. இரவு 9 மணியளவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மிக அதிகளவில் மக்கள் குவிந்தனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் கூட்டம் நிரம்பி வழிந்தன. முன்பதிவு பேருந்துகள், முன்பதிவில்லாத பேருந்துகள் என அனைத்திலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தொடர் விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர் திரும்புவதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு பக்கம் சிறப்பு பேருந்துகள், இன்னொரு பக்கம் தனியார் ஆம்னி பேருந்துகள், மற்றொரு புறம் தனியார் வாகனங்கள் என அனைத்தும் வந்ததால் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆமை வேகத்திலேயே வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை என முக்கிய நகரங்களிலும் இதே நிலை தான் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

SCROLL FOR NEXT