தமிழக செய்திகள்

தொடர் மழை: ஒரே நாளில் 5 அடி உயர்ந்த பவானிசாகர் அணை

நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை பெய்தது.

ஈரோடு,

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது. கோபியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

தண்ணீர் தேங்கியது

கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் கோபி நகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் கோபி நகரின் நடுவில் செல்லும் கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பவானிசாகர் அணை

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 56 ஆயிரத்து 672 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்தது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரியில் மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென இறங்கி 50 அடிக்கு வந்தது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை பெய்தது. இதனால் பவானி ஆற்றிலும், மாயாற்றிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட் டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக வினாடிக்கு 56 ஆயிரத்து 672 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 61.95 அடியாக இருந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு அணையின் நீர்மட்டம் 67.04 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு மேல் உயர்ந்துள் ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT