வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் இருந்து வேலூர் அமர்தி வன உயிரியல் பூங்காவிற்கு செல்லும் சாலையில் நாகநதி ஆற்றின் குறுக்கே புதிதாக தரைப்பாலம் கட்டும் பணி நடைப்பெற்று வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் தற்காலிக பாலம் அமைத்து சாலையை கடந்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஜவ்வாது மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அமர்தி வன உயிரியல் பூங்காவிற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.