தேனி,
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், முழு ஊதியம் வழங்கக் கோரியும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மருத்துவமனை வளாகத்தில் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நிர்ணயித்த 22 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு பதிலாக 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும், போராடும்போது மாற்று பணியாளர்களை நியமிக்க முயன்றதாகவும் கூறி ஊழியர்கள் அதிகாரியின் அலுவலகத்தைப் பூட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா பேச்சுவார்த்தை நடத்தியதுடன், வரும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை அடுத்து, ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.