தமிழக செய்திகள்

12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; குற்றவாளி போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி வடக்கு புதுகிராமம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் மகன் ரவிசங்கர் (வயது 57) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோ குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

இவ்வழக்கில் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி முருகன் இன்று ரவிசங்கரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டும் தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT