சென்னை,
விவசாயிகளின் வசதிக்காக வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் செயல்படும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பயிர் கடன் பெற்றுள்ள விவசாயிகள், தங்களுக்கான கடன் தள்ளுபடி தொகை நீங்கலாக, எஞ்சியுள்ள நிலுவை கடன் தொகையை வருகிற 30-ந் தேதிக்குள் திருப்பிச் செலுத்தி புதிய பயிர் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
விவசாயிகளின் நலன் கருதி, வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை), 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விடுமுறை நாட்களிலும் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிலுவை கடன் தொகையை செலுத்தி புதிய பயிர் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்களை தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ்அப் உதவி எண் 98400 66423 வாயிலாகவும் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.