தமிழக செய்திகள்

மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்து விடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்து விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தனர். இதன் பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இப்போது அம்மா மினி கிளினிக் அமைந்திருக்கும் பகுதியான மல்லி, டில்லிக்கு இணையான பகுதி என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்து விடும் என்று தெரிவித்தார். சுக்கு, மிளகு உள்ளிட்டவற்றை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று அவர் கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்