சென்னை,
சென்னை பிராட்வே மஸ்கான் சாவடியில் நூற்றாண்டு காலமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த செல்லப்பிராணிகள் சந்தைக்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பிராட்வே மஸ்கான் சாவடி பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செல்லப்பிராணிகள் சந்தை நடைபெற்று வந்தது. இந்தச் சந்தையில் நாய், பூனை உள்ளிட்ட பல்வேறு வகையான செல்லப்பிராணிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுவது வழக்கம். நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்தச் சந்தையை நம்பி ஏராளமான வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சந்தை நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், சந்தையில் நிலவும் சுகாதாரமற்ற சூழல் காரணமாக சுற்றுப்புறச் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் புகார்களைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி பிராட்வே மஸ்கான் சாவடியில் நடைபெற்று வந்த செல்லப்பிராணிகள் சந்தைக்குத் தடை விதித்துள்ளது. இதனால் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சியின் இந்தத் தடை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த சந்தையை திடீரென நிறுத்துவதால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நூற்றாண்டு காலமாக நடைபெற்று வந்த செல்லப்பிராணிகள் சந்தைக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் சென்னை பிராட்வே பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.