மாநகராட்சி ஆணையர்  
தமிழக செய்திகள்

அண்ணா நகர் டவர் பூங்காவில் 50 மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

கடந்த 5 மாதங்களில் 1,49,927 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

சென்னை,

மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், இன்று அண்ணா நகர் மண்டலம், அண்ணா நகர் டவர் பூங்காவில் 50 மரக்கன்றுகள் நடும் பணியினைத் தொடங்கி வைத்து மரக்கன்றினை நட்டார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

1,49,927 மரக்கன்றுகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர், சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மாநகராட்சியின் 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 5 மாதங்களில் 1,49,927 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர் ஜி எஸ் சமீரன், அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட அண்ணா நகர் டவர் பூங்காவில் 50 மரக்கன்றுகளை நடும் நிகழ்வினை தொடங்கி வைக்கும் விதமாக மரக்கன்றினை நட்டார்.

தன்னார்வலர்கள்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 993 பூங்காக்கள், 417 சென்னை பள்ளிகள், திறந்தவெளி நிலங்கள், மயானபூமிகள், விளையாட்டு திடல்கள், குளங்கள், ஏரிகள், பாலவாக்கம் கடற்கரை, மெரினா கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள், கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் மீட்டெடுக்கப்பட்ட இடங்கள், சாலைகளில் போக்குவரத்து மையப் பகுதிகள், சாலைகளில் உள்ள போக்குவரத்து தீவு பகுதி, மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள், செடிகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை தங்களது பகுதிகளல் மரக்கன்றுகள் நடுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT