மாநகராட்சி ஊழியர்கள்- தெரு நாய்கள் 
தமிழக செய்திகள்

தலைமை செயலக வளாகத்தில் சுற்றி திரிந்த தெருநாய்களை பிடித்து சென்ற மாநாகராட்சி ஊழியர்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.

தலைமைச் செயலகம்

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்களைப் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாகப் பிடித்துச் சென்றனர். சமீபகாலமாகத் தலைமைச் செயலக வளாகத்திற்குள் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகப் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன.

தெரு நாய்கள் பத்திரமாக மீட்பு

மேலும், இன்னும் இரண்டு நாட்களில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதனால், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைமைச் செயலக வளாகத்திற்குள் வலைகளுடன் நுழைந்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள், அங்கிருந்த தெரு நாய்களைப் பாதுகாப்பான முறையில் பிடித்து, வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

SCROLL FOR NEXT