கோவை,
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் செங்கோட்டை யன் நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்த முதல்-அமைச்சர் விஜய், பெரியார் பெயரில் இருக்கும் நூலகத்தை திறந்து வைத்தார். பெரியார் நூலகத்துக்கு புத்த கங்கள் வாங்கியதில் பல்வேறு ஊழல் நடந்து இருப்பதை அந்த துறை அமைச்சர் வெளிப்படுத்தி உள்ளார்.
பெரியார் வழியில் வந்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள், அவருடைய பெயரில் இருக்கும் நூலகத்துக்கே புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் செய்திருப்பது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற தவறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கு பதிப்பகம் இல்லாத புத்தகங்களும் இருக்கிறது என்ற நிலையை அமைச்சர் கூறி இருக்கிறார். எத்தனை பக்கங்கள் இருக்கிறது, அதற்கு என்ன விலை என்ப தும் கோடிட்டு காட்டப்பட்டு இருக்கிறது. இதை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.