திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்ற தொகுதி திருமுருகன் பூண்டியில் நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. ஆதவ் அர்ஜுனாவை யாரும் நம்ப போவதில்லை. அவர் யாருக்கு வேலை செய்கிறார் என அனைவருக்கும் தெரியும். ஜனநாயகன் படத்தை அவரே கூட வெளியிட்டிருக்கலாம். அதனால் வாக்குகள் கிடைக்கும் என செய்திருக்கலாம். ஆனால், படத்தை பார்த்து யாரும் ஓட்டு போடமாட்டார்கள்.
மக்களை சந்திக்க வேண்டும். மக்களை சந்திக்காத அவரை நோக்கி ஒரு கூட்டம் வருகிறது. சிரஞ்சீவிக்கு கூட கூட்டம் வந் தது. அந்த கூட்டம் வாக்குகளாக மாறாது. முதலில் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்று வந்து பேசவேண்டும். இது போல மலிவான அரசியல் செய்யக்கூடாது. விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை.
விஜய் மற்றும் உதயநிதி என இருவரும் பிரசாரத்தில் இருந்து தப்பிக்க உடல்நலம் சரியில்லை என சாக்கு சொல்லிக்கொண்டு போகிறார்கள். விஜய்யிடம் பேச எதுவும் இல்லை. அவரிடம் ரிப்போர்ட் கார்டே இல்லை. இருவரும் ஒரே மாதிரி அரசியல் செய்கிறார்கள். முதல்-அமைச்சராக ஆசைப்படுகிறார்கள். முதல்-அமைச்சராக வர படிப்படியாக உழைக்க வேண்டும். இருவரையும் மக்கள் முதல்-அமைச்சராக ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.