தமிழக செய்திகள்

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

சென்னை,

நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. முதல் நாளான இன்று அரசு பள்ளியில் பயின்ற 7.5% உள்ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

38 இடங்கள் உள்ள விளையாட்டு வீரர்கள் பிரிவில் 504 பேர் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 150 இடங்களுக்கு 14 பேர் பங்கேற்றுள்ளனர். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி, பாடப்பிரிவு ஆகியவற்றை காலை 10 மணி முதல் தேர்வு செய்யலாம் என்றும் தேர்வு செய்த கல்லூரிக்கான ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 15 காலை 7 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 40 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.