புதுடெல்லி,
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின்(DGHS) அங்கமான மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC), அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்களை நிரப்புவதற்கு 2026-27 ஆம் ஆண்டிற்கான கலந்தாய்வு அட்டவணையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (mcc.nic.in) வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2026-27 ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 4-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரையிலும், மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 13-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.