தமிழக செய்திகள்

எத்தனையோ அடக்குமுறைகள்; ஏவப்பட்ட நெருக்கடிகள்: உதயநிதி ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் இன்று.

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஜமீன்களிலும் - பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் இன்று. நாற்பதுகளில் இருந்த பேறிஞர் அண்ணா, இருபதுகளில் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தன் தம்பிமார்களுடன் கொட்டும் மழையில் தொடங்கிய தி.மு.க. இன்று 78-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த 78 ஆண்டுகளில் பல எட்டாத உயரங்களுக்குத் தமிழ்ச்சமுதாயத்தை ஏற்றிவிட்ட பெருமை கழகத்துக்கு உண்டு. சமூக நீதி - மாநில உரிமை - பெண் விடுதலை - தொழில் வளர்ச்சி என கொள்கை அடித்தளத்தில், தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது முதல், தன்னிகரற்ற மாநிலமாக்கியது வரை கழகம் ஆற்றிய பணிகள் ஏராளம்.

எத்தனையோ அடக்குமுறைகள் - ஏவப்பட்ட நெருக்கடிகள் - புதிய புதிய எதிரிகள், இத்தனைக்குப் பிறகும் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துடிப்போடு நடைபோடுகிறது தி.மு.க. நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நம் கழகத்தின் மேன்மைக்கு அயராது உழைப்போம். கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல - நம் உயிர் என்று முழங்குவோம்! வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT