தென்காசி,
தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களில் தற்போது முற்றிலுமாக மழை இல்லை. வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான நீரோடைகள் வறண்டு காட்சியளிக்கின்றன.
இந்த மலைப்பகுதியில் உள்ள நீரையே பிரதானமாக கொண்டிருக்கும் குற்றாலம் அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. பிரதான அருவியான மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்திற்கு உள்ளேயே குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது. இதேபோல் பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் மிகவும் குறைந்த அளவிலேயே விழுகிறது. புலியருவி முற்றிலும் வறண்டு தண்ணீரின்றி வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கிறது.
இதனால் புலியருவியில் நேற்று குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனினும் அவர்கள் ஐந்தருவியில் ஐந்து கிளைகளில் மிதமாக விழும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். அதுபோல் மெயின் அருவியில் குளித்தனர்.