தமிழக செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு கோர்ட்டுகளுக்கு இன்று விடுமுறை

விடுமுறைக்கு பதில் ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை வருகிற டிசம்பர் 12-ந்தேதி செயல்படும்.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஐகோர்ட்டுக்கு வருகிற 9-ந்தேதி திங்கட்கிழமை விடுமுறை என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட விடுமுறை தினப் பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சொந்த ஊருக்கு செல்பவர்கள் எந்த இடையூறும் இல்லாமல் செல்வதற்கு வசதியாக இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம், ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் கமலநாதன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாவட்ட அளவிலான அனைத்து கோர்ட்டுகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்தார். இதற்கு பதில், வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) மாவட்ட அளவிலான கோர்ட்டுகள் செயல்படும். அதேபோல, ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை வருகிற டிசம்பர் 12-ந்தேதி செயல்படும் என்றும் உத்தர விட்டுள்ளார்.

SCROLL FOR NEXT