தமிழக செய்திகள்

செஸ் போட்டியில் சாதனை: பிரக்ஞானந்தா, சவிதா ஸ்ரீ-க்கு சிபிஐ(எம்) வாழ்த்து

தங்கள் அசாத்திய திறமையால் உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள இரு இளம் சாதனையாளர்கள்.

சென்னை,

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

வாழ்த்துகள்

நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கும், ஆசிய தனி நபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று 2027 FIDE உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கும் சிபிஐ(எம்) சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

தங்கள் அசாத்திய திறமையால் உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள இரு இளம் சாதனையாளர்களும் மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.