தமிழக செய்திகள்

நகராட்சி தகனமேடை செயல்பாடு நிறுத்தி வைப்பு

நகராட்சி தகனமேடை செயல்பாடு நிறுத்தி வைப்பு

வெள்ளகோவில்

வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான தகன மேடை கணபதிபாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த தகன மேடை விறகுகள் மூலம் இயங்கி வருகிறது. தற்போது தனியார் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் எரிவாயு மயானத்தில் ஆட்டோ எல்பிஜி யூனிட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தகன மேடையில் பணிகள் முடிவுற்ற பிறகு எரிவாயு தகனமேடையில் தகனம் செய்யும் பணி செயல்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

----